உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இந்த ஆண்டு இறுதிக்குள் செஞ்சியில் படகு சவாரி அமைச்சர் மஸ்தான் தகவல் 

இந்த ஆண்டு இறுதிக்குள் செஞ்சியில் படகு சவாரி அமைச்சர் மஸ்தான் தகவல் 

செஞ்சி : 'மத்திய அரசின் அனுமதியோடு செஞ்சி கோட்டையில் உள்ள செட்டி குளம், சர்க்கரை குளத்தில் படகு சவாரி ஏற்பாடு செய்யப்படும்' என அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.செஞ்சி கோட்டையில் யுனெஸ்கோ தேர்வு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:உலக சுற்றுலா தினமான இன்று (நேற்று) யுனெஸ்கோ குழுவினர் செஞ்சி கோட்டையில் ஆய்வு செய்துள்ளனர். செஞ்சி கோட்டையை பார்வையிட்ட குழுவினர் மற்ற மாநிலங்களில் உள்ள கோட்டைகளை விட செஞ்சி கோட்டை வலிமையாக இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதன் மூலம் செஞ்சி கோட்டை மிக விரைவில் உலக அளவிளான சுற்றலா தலமாக மாறும். யுனெஸ்கோவின் அறிவிப்பு வந்தவுடன் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும்.தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி மதிப்பில் திட்டங்கள் தயார் செய்து பரிசீலனையில் உள்ளது. மத்திய அரசின் சுற்றுலாத் துறையுடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்துவதற்காக அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்.மத்திய அரசின் நிதியும் சேர்ந்து சுற்றுலா திட்டங்கள் நிறைவேற்றப்படும். மத்திய அரசின் அனுமதியோடு செஞ்சி கோட்டையில் உள்ள செட்டி குளம், சர்க்கரை குளத்தில் படகு சவாரி ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அமைச்சர் மஸ்தான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை