மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
27-May-2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வட்டாரத்தில் விவசாயிகள் அடையாள அட்டை பெறாதவர்கள் ஜூன் 30க்குள் பதிவு செய்து பெற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜெய்சன் செய்திக்குறிப்பு:விவசாயிகள் அரசு துறை சார்ந்த திட்டங்களை மிக விரைவாக பெறவும், பிரதம மந்திரி ஊக்கத்தொகையை பெற அடையாள அட்டை அவசியம். விக்கிரவாண்டியில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அடையாள அட்டைகள் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மூலம் முகாம், பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது.வரும் ஜூன் 30 ம் தேதிக்குள் அனைத்து தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான பட்டா, சிட்டா, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றுடன், முகாம் நடக்கும் இடங்கள் அல்லது அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
27-May-2025