தி.மு.க., நிர்வாகிகளுக்கு பிரசார பயிற்சி கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், நிர்வாகிகளுக்கு 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசார செயலி மற்றும் சமூக ஊடகங்கள் கையாள்வதற்கான பயிற்சி கூட்டம் நாளை நடக்கிறது.விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை:விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் கலைஞர் அறிவாலயத்தில், மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு பரப்புரைக்கான செயலி மற்றும் சமூக ஊடகங்கள் கையாள்வதற்கான பயிற்சி கூட்டம் நாளை 28ம் தேதி காலை 9:30 மணிக்கு நடக்கிறது.அதில், விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட விழுப்புரம் கிழக்கு நகரம், மேற்கு நகரம், வளவனுார் பேரூராட்சி, காணை கிழக்கு ஒன்றியத்தினருக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. மதியம் 2:00 மணிக்கு கோலியனுார் கிழக்கு ஒன்றியம், மத்திய ஒன்றியம், தெற்கு ஒன்றியம் மற்றும் கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்கான பயிற்சி கூட்டம் நடக்கிறது.29ம் தேதி காலை 9:30 மணிக்கு வழுதாவூர் சாமிக்கண்ணு லட்சுமி அம்மாள் திருமண மண்டபத்தில், வானுார் தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், மத்திய ஒன்றியம், கிளியனுார் கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியத்திற்கும், மதியம் 2:00 மணிக்கு கோட்டக்குப்பம் நகரம், கண்டமங்கலம் மத்திய ஒன்றியம், வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியத்திற்கும் பயிற்சி கூட்டம் நடக்கிறது.ஓட்டுச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், பாக முகவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.