உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒரே சர்வே எண்ணில் பலருக்கு மனைப்பட்டா; சாலை மறியல், டவர் மீது ஏறி போராட்டம் மயிலத்தில் பரபரப்பு

ஒரே சர்வே எண்ணில் பலருக்கு மனைப்பட்டா; சாலை மறியல், டவர் மீது ஏறி போராட்டம் மயிலத்தில் பரபரப்பு

மயிலம் : மயிலத்தில், 2021ம் ஆண்டு வழங்கப்பட்ட மனைப்பட்டா மீண்டும் 2024ம் ஆண்டில் அதே சர்வே எண்ணில் மேலும் பலருக்கு வழங்கப்பட்டதை கண்டித்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மயிலம் மலை அடிவாரத்தில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 2021ம் ஆண்டு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.இந்நிலையில் கிராம மக்கள் வசிக்கும் அதே சர்வே எண்ணில் புதிதாக ஒரு பட்டாவை கடந்த மே 2024ம் ஆண்டில் அரசு வழங்கியது போல மேலும் பலர் நகல் வைத்துள்ளனர். எனவே, இதே குடியிருப்பு பகுதிக்கு மறுமுறை அரசு சார்பில் வழங்கிய வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் குடியிருப்போர் சங்கம் சார்பில் அமைச்சர்கள், கலெக்டர், தாசில்தார், வருவாய் ஆய்வாளர் என பல முறை மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியில் குடியிருப்போர், நேற்று காலை 7:00 மணிக்கு போராட்டம் நடத்த திரண்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த லோக விசித்திர பணக்காரன், 52; என்பவர் பெட்ரோல் கேனுடன் அங்குள்ள மொபைல்போன் டவர் மீது ஏறி அங்கிருந்து தீக்குளிக்க போவதாக அறிவித்தார்.தகவல் அறிந்து வந்த மயிலம் போலீசார், அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கும்படி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவர் கீழே இறங்கி வந்தார்.தொடர்ந்து காமராஜர் நகர் பகுதியில் வசிப்போர் மயிலம் - புதுச்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை 7:30 மணியளவில் தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அனைவரும் அங்கிருந்த கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை