உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மீது கார் மோதல் பதிவாளர் காயம்

பைக் மீது கார் மோதல் பதிவாளர் காயம்

விழுப்புரம்:விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அரசு அதிகாரி காயமடைந்தார்.விழுப்புரம், ராகவன்பேட்டையை சேர்ந்தவர் காளிங்கநாதன் மகன் தனவேந்தராஜ்,38; தமிழ்நாடு கூட்டுறவு துறை சார் பதிவாளர். கடந்த 8 ம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி சென்றார். பொய்யப்பாக்கம் கூட்ரோடு அருகே சென்ற போது, பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், காயமடைந்த சார் பதிவாளர் தனவேந்தராஜ், விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விழுப்புரம் தாலுகா போலீசார் விபத்து ஏற்படுத்திய ராஜேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை