உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நில தகராறில் தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

நில தகராறில் தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே நில பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், உறவினர்களை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் தாலுகா நங்காத்துார் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் மனைவி ராயம்மாள்,60; குச்சிப்பாளையத்தில் உள்ள இவரது குடும்ப நிலத்தை, அவரது மூத்த சகோதரர் அகஸ்டியன்,78; குடும்பத்தினர் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி, அந்த நிலத்தில் தனக்கான பங்கை தர வேண்டுமென ராயம்மாளும், அவரது இரண்டாவது சகோதரர் ஜோசப்,62; ஆகியோரும் சென்று அகஸ்டியனிடம் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த அகஸ்டியன் மற்றம் அவரது மகன்கள் ஜூலியஸ்,43; கிறிஸ்துராஜ்,33; ஆகியோர் சேர்ந்து, ராயம்மாள், ஜோசப் ஆகியோரை தாக்கினர். படுகாயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், தாக்குதல் நடத்திய 3 பேர் மீதும், வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை