உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு

அவலுார்பேட்டை : வளத்தி அருகே குப்பை கொட்டிய தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வளத்தி அடுத்த பென்னகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 41; இவர் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு குப்பையைக் கொட்டினார்.இதனை அவரது உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த கவிதா, 34; ரங்கநாதன், 37; ஆகியோர் எங்கள் இடத்தில் ஏன் குப்பை கொட்டுகிறாய் என கேட்டதால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகாரின் பேரில், கவிதா, ரங்கநாதன், பூங்காவனம், சங்கர் ஆகிய 4 பேர் மீதும் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை