இரு குடும்பத்தினர் மோதல் 5 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
விழுப்புரம்: இரு குடும்பத்தினரிடையே நடந்த மோதலில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.விழுப்புரம் சாலையாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைதம்பி, 50; இவர், நேற்று முன்தினம் மாலை, அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் குளிக்க சென்றபோது, முறைத்து பார்த்ததால், பெண்ணின் வீட்டினர் தட்டி கேட்டனர்.அப்போது, ஆசைதம்பி குடும்பத்தினருக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். மோதலை தடுக்க சென்ற அதே பகுதி தேவமான், 25; காயமடைந்தார்.இது குறித்த புகாரின் பேரில், ஆசைதம்பி அவரது மனைவி வத்சலா, 45; உறவினர் அரவிந்தன், 23; உள்ளிட்ட 5 பேர் மீது, வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, அரவிந்தனை கைது செய்தனர்.