டாஸ்மாக் கடையில் போஸ்டர் பா.ஜ.,வினர் மீது வழக்கு
செஞ்சி: செஞ்சியில், டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் செஞ்சியில் டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டி டாஸ்மாக்கில் ஊழல் நடைபெறுவதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒன்றிய தலைவர் தாராசிங் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மேகலா, மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், முன்னாள் ஒன்றிய தலைவர் தங்கராமு, சிவாஜி பங்கேற்றனர்.இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் மாவட்ட துணை தலைவர் அன்பழகன் மற்றும் பலர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.