மேலும் செய்திகள்
கூலி தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு
25-Jul-2025
விழுப்புரம் : கடனை திருப்பிக்கொடுக்காத தம்பதியை தாக்கிய முதியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தை சேர்ந்தவர் சுதர்சனம், 40; இவர், அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி, 70; மகன் முத்துக்குமார், 35; என்பவரிடம் 6 மாதங்களுக்கு முன், 10 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கினார். இதுவரை பணத்தை திருப்பிக்கொடுக்காததால், சுதர்சனம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, 38; ஆகியோரை சுப்ரமணி திட்டி தாக்கினார். விழுப்புரம் தாலுகா போலீசார், சுப்ரமணி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
25-Jul-2025