உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்குவரத்துக்கு இடையூறு மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு

போக்குவரத்துக்கு இடையூறு மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாஜி எம்.எல்.ஏ., உட்பட 23 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.ஹிந்து மதம் மற்றும் பெண்களை பற்றி இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, விழுப்புரம் அடுத்த காணையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன், ஒன்றிய மகளிரணி செயலாளர் மல்லிகா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன் உட்பட 23 பேர் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி