மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
24-Aug-2025
விழுப்புரம்: மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். விழுப்புரம் அடுத்த பிடாரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு, 34; சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஆஷா, 26; என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ள ஆஷாவை, ஆனந்தபாபு திட்டி தாக்கினார். தடுக்க முயன்ற ஆஷாவின் தாய் கலைச்செல்வி, தங்கை ஷர்மிளா ஆகியோரையும் ஆனந்தபாபு திட்டி மிரட்டினார். விழுப்புரம் தாலுகா போலீசார், ஆனந்தபாபு மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Aug-2025