உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி மீது வழக்கு

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி மீது வழக்கு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பெண் சத்துணவு திட்ட சமையலரை மிரட்டியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த வடவாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மனைவி திலகவதி, 35; அரசு பள்ளியில் சத்துணவு திட்ட சமையலர்.இவரது உறவினர் மணிகண்டனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி சிவா, 41; என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மணிகண்டனுக்கு ஆதரவாக திலகவதி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவா, திலகவதியை திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.திலகவதி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் சிவா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ