உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே, கங்கை அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. வாணியம்பாளையம், கங்கை அம்மன் கோவிலில், ஆனி மாத உற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக சாகை வார்த்தல் விழா நேற்று நடந்தது. காலை 8.00 மணிக்கு மூலவர் அம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.தொடர்ந்து மூலவர் கங்கையம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் 1:30 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. பெண்கள் கூழ், கஞ்சி குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு படையிலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து இரவு உற்சவர் கங்கைம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 9:00 மணிக்கு வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி