உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மத்திய மாவட்ட தி.மு.க., ரத்ததான முகாம்

மத்திய மாவட்ட தி.மு.க., ரத்ததான முகாம்

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, 102வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டதுமாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் அருகேவுள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்திலிருந்து தி.மு.க., நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று கலைஞர் அறிவாலயம் முன் உள்ள கருணாநிதி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினர்.தளபதி அரங்கில் நடந்த ரத்ததான முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இதில், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், துணை செயலாளர் இளந்திரையன், நகர செயலாளர்கள் சக்கரை, வெற்றிவேல், வளவனுார் பேரூராட்சி செயலாளர் ஜூவா, சேர்மன்கள் தமிழ்செல்விபிரபு, மீனாட்சி ஜூவா, சச்சிதானந்தம், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகேவல், ராஜா, சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், பொறியாளர் அணி செல்வகுமார், தகவல் தொழில்நுட்பஅணி அன்பரசு, வர்த்தக அணி வெங்கடேசன், தொண்டரணி கபாலி, மருத்துவ அணி செந்தில்குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி பாலாஜி, இலக்கிய அணி துரை மணிவேல், நகர இளைஞரணி மணிகண்டன், கவுன்சிலர்கள் ஜெயந்தி மணிவண்ணன், புல்லட் மணி, புருஷோத்தமன், சாந்தராஜ், ஜனனிதங்கம், நவநீதம் மணிகண்டன், சசிரேகா பிரபு, கோமதி பரஸ்கர், வசந்தா அன்பரசு, மகாலட்சுமி செந்தில், சசிகலா கபிரியேல், பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !