உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் ஆரோவில் வருகை

மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் ஆரோவில் வருகை

வானுார் : புதுச்சேரி மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள், ஆரோவில் மாத்ரி மந்திரை பார்வையிட்டனர்.மத்திய கண்காணிப்பு ஆணைய கூடுதல் செயலாளர் பனி பிரதராய், சிறப்பு அதிகாரி பிரசாத்குமார் ஆகியோர் நேற்று டில்லியில் இருந்து சர்வதேச நகரமான ஆரோவில் வந்தனர். ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி வரவேற்று, ஆரோவில்லின் வளர்ச்சி திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார்.இருவரும் மாத்ரி மந்திர் பகுதியை பார்வையிட்டனர். மாத்ரி மந்திரின் தியான அறையில் ஆன்மிக அமைதியை நுகர்ந்ததோடு, அதன் உள்நோக்கம் மற்றும் தத்துவம் குறித்து ஆய்வு செய்தனர். மாத்ரிமந்திரின் 12 இதழ்கள், ஆரோவிலின் நோக்கம், அன்னையின் புனித வாக்குகள் மற்றும் நகரின் ஆன்மிக, சமூகப் பணிகள் குறித்த சிறப்பு நுால் மற்றும் தகவல் வெளியீடுகளை ஆரோவில் நிர்வாகிகள் வழங்கினர்.ஆரோவில் விசிட்டர் சென்டர், ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் வாழ்வியல் போன்ற ஆரோவிலின் கொள்கைகளைப் பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. உள்ளூர் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், இயற்கை உணவு வகைகளின் சுவையை அனுபவித்து, ஆரோவிலின் சுற்றுச்சூழல் நடைமுறைகளையும் நிலைத்தன்மை முயற்சிகளை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ