சாரணர்களுக்கு சி.இ.ஓ., பாராட்டு
விழுப்புரம்: பாரத சாரண, சாரணியர் இயக்க ஊர்வலம் மற்றும் கருணாநிதி நுாற்றாண்டு விழாவில் பங்கேற்று பரிசு பெற்ற சாரண மாணவர்களை சி.இ.ஓ., பாராட்டினார்.பாரத சாரண சாரணியர் இயக்கம் வைர விழாவையொட்டி, திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேசிய அளவில் பாரத சாரண, சாரணியர் இயக்க ஊர்வலம் மற்றும் கருணாநிதி நுாற்றாண்டு விழா நடந்தது.இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் வருவாய் மாவட்டம் சார்பில் சி.இ.ஓ., அறிவழகன் ஆலோசனையின் பேரில், 62 சாரண மாணவர்களும், 44 சாரணிய மாணவிகளும், 20 சாரண, சாரணிய ஆசிரியர்கள் பங்கேற்று, தேசிய அளவில் சான்றிதழ், பரிசு பெற்றனர்.மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்த சாரண, சாரணிய மாணவர்களை சி.இ.ஓ., பாராட்டி சான்றிதழ் வழங்கினார். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள், துணை ஆய்வாளர் உடனிருந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை சாரண, சாரணியர் மாவட்ட செயலர் மணி, செஞ்சி செயலாளர் சக்கரவர்த்தி, திண்டிவனம் செயலாளர் ஸ்ரேயன் குமார் ஆகியோர் செய்தனர்.