மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
விழுப்புரம்: தன்னார்வ அமைப்புகள் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.டிசம்பர் 3 இயக்கம், புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, சேவா குழு உட்பட தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடந்த விழாவிற்கு, மாவட்ட செயலாளர் தமிழரசி வரவேற்றார். மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.செயலாளர் தமிழ் அருளழகன் முன்னிலை வகித்தார். இதில், 9ம் வகுப்பு முதல் கல்லுாரி வரை பயிலும் 100 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் மற்றும் தேர்வு அட்டை, வாட்டர் பாட்டில், பேக் வழங்கப்பட்டது.கல்வி உபகரணங்களை ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பு மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை, டிசம்பர் 3 இயக்க மாநில பொது செயலாளர் அண்ணாமலை, தன்னார்வ அமைப்பு முகேஜ் வழங்கினர். பட்டதாரி ஆசிரியர் அருளப்பன், தன்னார்வலர் முருகன், வடிவுகரசி வாழ்த்துரை வழங்கினர். துணை தலைவர் பாஸ்கர், அணி செயலாளர் செந்தில்குமார், மகளிரணி தலைவி சர்மிளா, செயலாளர் மாலா, ஒன்றிய தலைவர் பூங்காவனம் செய்தனர்.