உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காவலர் பயிற்சி பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு

காவலர் பயிற்சி பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு

மயிலம்: மயிலம் கொல்லியங்குணம் காவலர் பயிற்சி பள்ளியில் 292 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்ற 2665 போலீஸாருக்கு முதலமைச்சர் கடந்த மாதம் 27ம் தேதி பணி நியமன ஆணைகளை வழங்கினார். மயிலம் ஒன்றியத்தில் உள்ள கொல்லியங்குணம் காவலர் பயிற்சி பள்ளியில் தேர்வு செய்யப்பட்ட 292 இரண்டாம் நிலை ஆயுதப்படை பெண் போலீசாருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது.இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு 7 மாத கால அடிப்படை பயிற்சி மற்றும் ஒரு மாத கால செய்முறை பயிற்சி நடக்கிறது.இந்த சான்றிதழ் சரி பார்ப்பு முகாமில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். இதற்காக பயிற்சிக்கு வந்த பெண் போலீசாரின் சான்றிதழ்களை பள்ளியின் துணை முதல்வர் எட்டியப்பன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலின், தீபா, சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் சரிபார்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ