உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாணக்யா வித்யாஷ்ரம் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் அபாரம்

சாணக்யா வித்யாஷ்ரம் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் அபாரம்

திண்டிவனம்: மரக்காணம் சாணக்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், மரக்காணத்தில் உள்ள சாணக்யா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், திண்டிவனம் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ் 2 மாணவி ஜெனி ஆரோக்கிய கிறிஸ்டி 93 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மாணவி லோவின்ஷா 90 சதவீத மதிப்பெண்ணுடன் 2ம் இடமும், மாணவர் அபிஜெய் 89 சதவீத மதிப்பெண்ணுடன் 3ம் இடம் பிடித்தார்.இதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மித்ன் பாரதி மற்றும் சோமராஜ் ஆகியோர் தலா 93 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தனர். மாணவர் ஜீவன் 92 சதவீதத்துடன், 2வது இடமும், மாணவர் நிகிலேஷ் 89 சதவீதம் எடுத்து 3ம் இடம் பிடித்தார்.தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை சாணக்யா பள்ளி குழும தலைவர் தேவராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பள்ளி முதல்வர் நரேன் பாபு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை