மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (16.05.2025) திருவள்ளூர்
16-May-2025
விழுப்புரம் : விழுப்புரம் சங்கரமடத்தில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோத்சவத்தையொட்டி, 1008 சுஹாசினி பூஜை நடந்தது.விழுப்புரம் சங்கரமடம், வேத பாடசாலை, சந்திரசேகரேந்திர சுவாமிகள் அவதார ஸ்தலத்தில், வேத சம்ரக்ஷண ட்ரஸ்ட் சார்பில், 132வது ஆண்டு காஞ்சி காமகோடி 68 வது பீடாதிபதி, சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோத்சவம் கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.தொடர்ந்து கிருஷ்ண யஜூர்வேத க்ரம பாராயணம் ஆரம்பம் நடைபெற்றது. கடந்த 3ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ஸ்ரீ ஸீக்த ஹோமம், நவக்கிர ஹோமம் நடந்தது. நேற்று காலை 8.00 மணிக்கு சென்னை கல்யாண சுந்தர காமாக்ஷி மண்டலி சார்பில், 1008 சுஹாசினி பூஜை நடந்தது.மாலை 6.00 மணிக்கு மகா பெரியவா மகிமை பற்றி டாக்டர் பாஸ்கர் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். இரவு 7.00 மணிக்கு கலா சாதனாலயா மாணவி சஹானா கணேஷ் பரதநாட்டியம் நடந்தது.தொடர்ந்து, இன்று காலை 7.00 மணிக்கு ம்ருத்துந்ஜய ஹோமம், நாளை காலை 6.00 மணிக்கு கோ பூஜை, ஸ்ரீ மகா ருத்ர ஏகாதசினி ஹோமம், சிறப்பு அபிஷேகம், பகல் 12.00 மணிக்கு க்ரம பாராயணம் பூர்த்தி, அன்னதானம் நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு மாட வீதிகளில் மகா பெரியவா படம் திருவீதியுலாவும், 14 ம் தேதி திவ்யநாம சங்கீர்த்தனம், 15ம் தேதி ராதா கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுளை விழுப்புரம் சங்கரமடம் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்துள்ளனர்.
16-May-2025