உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மார்க்க ரயில்களில் மாற்றம்

விழுப்புரம் மார்க்க ரயில்களில் மாற்றம்

விழுப்புரம்; தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே, திருச்சி கோட்ட அலுவலக செய்திக்குறிப்பு:திருச்சி கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சென்னை தாம்பரத்திலிருந்து தினசரி காலை 9:45 மணிக்கு புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பாசஞ்சர் ரயில் (எண் 66045), ஜூலை 5, 8 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம்-விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த ரயில் தாம்பரத்திலிருந்து முண்டியம்பாக்கம் வரை இயக்கப்படும்.விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1:40 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரை பாசஞ்சர் ரயில் (எண் 66046), ஜூலை 5, 8 ஆகிய தேதிகளில், விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த ரயில் முண்டியம்பாக்கத்திலிருந்து பிற்பகல் 1:55 மணிக்கு புறப்பட்டு செல்லும்.விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2:35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் (எண் 66019), ஜூலை 5,8ம் தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக பிற்பகல் 3:05 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும்.சென்னை, எழும்பூரில் இருந்து காலை 7:45 மணிக்கு புறப்படும் எழும்பூர்-திருச்சி சோழன் அதிவிரைவு ரயில் (எண் 22675), ஜூலை 5,6,7 ஆகிய தேதிகளில், வசதிக்குறிய ரயில் நிலையத்தில் 30 நிமிடங்களும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 6:35 மணிக்கு புறப்படும், எழும்பூர்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் (எண் 66051) ஜூலை 6ம் தேதி, வசதிக்குறிய ரயில் நிலையத்தில் 10 நிமிடங்களும், குருவாயூரிலிருந்து இரவு 11:15 மணிக்கு புறப்படும் குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்16128) ஜூலை 8ம் தேதி, வசதிக்குறிய ரயில் நிலையத்தில் 30 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பிறகு இயக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை