அரசலீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா
வானுார் : ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர் கோவிலில், தேர் திருவிழா நடந்தது.வானுார் அடுத்த ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி சமேத அரசலீஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக பெருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி, தினந்தோறும் இரவு 8;00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் சுவாமிக்கு திருக்கல்யாணமும், நேற்று காலை 7;00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் மாட வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. இன்று 9ம் தேதி இரவு 10;00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது.