மேலும் செய்திகள்
கூட்டுறவு பட்டய பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா
25-Oct-2024
விழுப்புரம், : விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் ஆண்டு, முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டயம் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். தொடர்ந்து, பயிற்சி பெற்றவர்களுக்கு, வேலை வாய்ப்பை பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தி, பட்டய சான்றிதழ்களை வழங்கினார்.விழுப்புரம் சரக துணைப் பதிவாளர் பிரியதர்ஷினி வாழ்த்திப் பேசினார். கூட்டுறவு மேலாண்மை நிலைய விரிவுரையாளர்கள், பணியாளர்கள், பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.மேலாண்மை நிலைய முதல்வர் ரவி நன்றி கூறினார்.
25-Oct-2024