மேலும் செய்திகள்
தமிழாய்வு துறை சார்பில் கருத்தரங்கம்
07-Sep-2024
விழுப்புரம் : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்று சாதனை படைத்தனர்.தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி மாணவர்கள் மாவட்ட அளவில் ஆண்களுக்கான கையுந்து பந்து போட்டி மற்றும் கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்தனர்.கூடைப்பந்தில் 3வது இடத்தை பிடித்தனர். ஜூடோ போட்டியில் நான்கு பதக்கங்களும், தடகளத்தில் 3 பதக்கங்களை பெற்று சாதித்தனர். இறகு பந்து போட்டியில் முதலிடத்தையும், கபடி போட்டியில் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.பெண்கள் பிரிவில் மாணவிகள் கைப்பந்தில் முதலிடத்தையும், கால்பந்து 2வது இடம், கபடி 3வது இடம், கையுந்து பந்து 3வது இடத்தை பிடித்தனர். தடகளத்தில் 3 பதக்கங்களையும், மேசை பந்து போட்டியில் முதலிடத்தையும் பிடித்தனர்.அவர்கள் வரும் அக்., 6ம் தேதி முதல் 24ம் தேதி வரை மாநில அளவில் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஜோதிபிரியா பாராட்டினர்.
07-Sep-2024