குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
செஞ்சி: செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிளான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கி பேசினார். பி.டி.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சதீஷ், சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அஜித்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள்வளர்ச்சி திட்டபிரதிநிதி சுபா, டி.இ.ஓ., வெங்கடேசன் மற்றும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஏ.பி.டி.ஓ., சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.