மேலும் செய்திகள்
தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
15-Jun-2025
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சேர்க்கை
29-May-2025
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 13 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட குழந்தைகள் நல மையம் திறப்பு விழா நடந்தது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கினர். நகர செயலாளர் கணேசன், நகர அவை தலைவர் செந்தில் முருகன் வரவேற்றனர்.ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், நகர துணை சேர்மன் ஜோதி முன்னிலை வகித்தனர். விழாவில் எம்.எல்.ஏ., பொன்முடி குழந்தைகள் நல மையத்தை திறந்து வைத்தார்.தாசில்தார் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் ேஷக் லத்திப், இளநிலை உதவியாளர் பாலமுருகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
15-Jun-2025
29-May-2025