ஜெ.ஆர்., இண்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த அவணம்பட்டு ஜெ.ஆர்.,இண்டர்நேஷனல் பள்ளியில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன், பள்ளி முதல்வர் பானுமதி வெங்கடரமணன் தலைமை தாங்கினர். இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் நாடகங்களில் பள்ளி மழலையர்கள் நடித்தனர். விழாவையொட்டி மழலையர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. விழாவில், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், பழமை நடைமுறைகளை மீண்டும் கொண்டு வரும் வகையில் கடிதம் எழுதும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.விழாவில் பள்ளி ஆசியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.