மேலும் செய்திகள்
ஆர்.கே.எஸ்., பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
24-Dec-2024
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.விழாவிற்கு கிருபானந்த வாரியார் இலக்கியப் பேரவை செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். கோலியனுார் முன்னாள் சேர்மேன் விஜயா சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் தேன்மொழி ராஜேந்திரன் வரவேற்றார். விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் பள்ளி நிறுவனங்களின் செயலர் நிர்மல் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அற்புதமாதா குழந்தைகள் காப்பக நிர்வாகி கொடிசில்லா, சரளா ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.நிகழ்ச்சியை கிரேஸி தொகுத்து வழங்கினார்.தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் அருட்சகோதரி நிர்மலுக்கு பொன்விழா வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி முதல்வர் வாசுகி, மேலாளர் செல்லம்மாள் மஞ்சுளா, ஐ.டி.ஐ முதல்வர் நுார்முகமது, செங்கல்வராயன் ஐ.டி.ஐ முதல்வர் சத்தியராஜ் கலந்துகொண்டனர். பழனிவேலு ஐ.டி.ஐ அறங்காவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ராஜா செய்திருந்தார்.
24-Dec-2024