மேலும் செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை
12-Oct-2024
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் 50 லட்சம் ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவலிங்கம் , உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் 50 லட்சத்து 63,972 ரூபாய் ரொக்க பணமும், 63 கிராம் தங்க நகைகளையும், 600 கிராம் வெள்ளிப் பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறங்காவலர்கள் சுரேஷ், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளர் மணி, சதீஷ், கோவில் பணியாளர்கள் மற்றும் சேவார்த்திகள் உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர்.
12-Oct-2024