உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துாய்மைப் பணியாளர்களுக்கு கலெக்டர் பாராட்டு

துாய்மைப் பணியாளர்களுக்கு கலெக்டர் பாராட்டு

கண்டமங்கலம் : சிறுவந்தாடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்த துாய்மை பாரத விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துாய்மைப் பணியாளர்களை கலெக்டர் பாராட்டினார்.தமிழக அரசின் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கண்டமங்கலம் அடுத்த சிறுவந்தாடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சித் துறை, துாய்மை பாரத இயக்கத்தின் சார்பில் மாணவிகள் துாய்மையை கடைபிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், கலெக்டர் பழனி தலைமையில் மாணவ, மாணவிகள் துாய்மை குறித்து உறுதிமொழியேற்றனர்.இந்நிகழ்ச்சியில் துாய்மைப் பணியாளர்களின் பணியினை பராட்டும் வகையில் அவர்களுக்கு கலெக்டர் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஊரக வளர்ச்சித் துறை செயற் பொறியாளர் ராஜா, கண்டமங்கலம் பி.டி.ஓ.,க்கள் மணிவண்ணன், சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை