உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாரதிதாசன் அரங்க அமைவிடம் கலெக்டர் ஆய்வு

பாரதிதாசன் அரங்க அமைவிடம் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் : கோட்டக்குப்பம் நகராட்சி, பொம்மையார்பாளையத்தில் பாரதிதாசன் அரங்கம் அமைப்பதற்கான இடத்தை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.கடந்த ஏப்., 15ம் தேதி சட்டசபை கூட்ட தொடரில், செய்தி மக்கள் தொடர்பு துறை கோரிக்கையின் போது, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர், புரட்சி கவிஞர் என்ற பெருமை கொண்ட பாரதிதாசனுக்கு, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதையொட்டி, நேற்று கோட்டக்குப்பம் நகராட்சி, பொம்மையார்பாளையத்தில் அரங்கம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் பார்வையிட்டார். சப் கலெக்டர் வெங்கடேஷ்வரன், தாசில்தார் வித்யாதரன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை