உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் விழுப்புரத்தில் கலெக்டர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் விழுப்புரத்தில் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்தது. விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளி மையம் மற்றும் விழுப்புரம் சர்வேயர் நகர் ராமகிருஷ்ணா பள்ளி ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த முகாமை கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில், 'தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானுார் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட 1,088 ஓட்டுச்சாவடி மையங்களிலும் கடந்த 16,17ம் தேதியும், தொடர்ந்து 23, 24ம் தேதியான இன்றும் சிறப்பு முகாம் நடந்தது.முகாம்களில் விண்ணப்பித்தவர்களின் விபரம், திருத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இணைய வழியிலும் விண்ணப்பிக்கலாம்' என்றார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், தாசில்தார் கனிமொழி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை