உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்கும் கடைகளின் உரிமம் ரத்து கலெக்டர் உத்தரவு

குட்கா விற்கும் கடைகளின் உரிமம் ரத்து கலெக்டர் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின ஆய்வுக்கூட்டம் நடந்தது.உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி கலெக்டர் அலுவலத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசியதாவது;விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா, புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் போதை தரக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.குட்கா, போதை பொருள் விற்பனை செய்யும் கடைகளின் வணிக உரிமத்தினை ரத்து செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.கூட்டத்தில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மஞ்சுளா, புகையிலை கட்டுப்பாட்டு அலுவலர் சுனிதா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை