போதை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, போதை பொருட்கள் விற்பனை தடுத்தல் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி பேசியதாவது;கல்வி நிறுவனங்கள் அருகே செயல்படும் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்து, விற்பனையை தடுக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் டிரக் ப்ரி டி.என். செயலி குறித்து விளக்கம் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.போலீஸ், உணவு பாதுகாப்பு, சுகாதார ஆய்வாளர்கள், உள்ளாட்சி துறை கூட்டாய்வு செய்து, தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். எஸ்.பி., சரவணன், சப்-கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், உதவி ஆணையர் ராஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.