உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக சட்டசபை பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் நாளை தமிழக சட்டசபை பேரவை பொது கணக்கு குழு ஆய்வு மேற்கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜூ, ஆர்.டி.ஓ., முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சிவஞானம் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை