மேல்மலையனுாரில் கலெக்டர் ஆய்வு கூட்டம்
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு கூட்டம் நடந்தது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, கிராமங்களில் மேற்கொள்ளப்படும் அரசு திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.151 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது, 10 நபர்களுக்கு வீடு கட்ட பணி ஆணையினையும், 20 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களும், தாட்கோ மூலம் துாய்மை பணியாளர் மகளின் திருமண உதவி தொகை 5 ஆயிரம், கல்வி உதவி தொகை 1,000 , 96 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.இதில் டி.ஆர்.ஒ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் பத்மஜா, திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யான் சு நிகாம், ,ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன்,மகளிர் திட்ட இயக்குநர் சுதா, தனி துணை ஆட்சியர் முகுந்தன், தாசில்தார் தனலட்சுமி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.