மேலும் செய்திகள்
அரசு கலைக் கல்லுாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
26-Oct-2024
விழுப்புரம் : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் வாயிற்முழக்க போராட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம், விழுப்புரம் கிளை சார்பில் நடந்த போராட்டத்திற்கு, கிளைச் செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். தலைவர் வெங்டேசன், விஜயரங்கம், கடலுார் மண்டல செயலாளர் தண்டாயுதபாணி, இணைச் செயலாளர் ஜோதிப்பிரியா ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.போராட்டத்தில், அண்ணாமலை பல்கலையில் நியமிக்கப்பட்ட உபரி ஆசிரியர்களை அரசு கல்லுாரிகளில் மாற்று பணி என்ற முறையில் பணியமர்த்தியவர்களை, இங்கு நிரந்தரம் செய்யக்கூடாது. இவர்களை அரசு கல்லுாரிகளில் நிரந்தரமாக உள்ளெடுப்பு செய்தால், இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் என கோஷம் எழுப்பினர்.கிளை பொருளாளர் அசோகன் நன்றி கூறினார்.
26-Oct-2024