உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் அடுத்த பனங்குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகள் வர்ஷினி,19; இவர், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். பொங்கல் விடுமுறை தினத்தில் வீட்டுக்கு வந்திருந்த வர்ஷினி. இரு தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகாரளித்தனர். வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ