கல்லுாரி மாணவரின் குறும்படத்திற்கு பாராட்டு
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த கருத்தரங்கில் கல்லுாரி மாணவரின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், கண்காட்சி நடந்தது. இதில், மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பி.சி.ஏ., மாணவர் செல்வமணி உருவாக்கிய போதை விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. இதை பார்வையிட்ட டி.ஐ.ஜி., உமா, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், எஸ்.பி., சரவணன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா ஆகியோர் மாணவர் செல்வமணியை பாராட்டி, கேடயம் வழங்கினர். அப்போது, உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தினகரன், கல்லுாரி என்.சி.சி., அலுவலர் கார்த்தி, இயற்பியல் துறைத்தலைவர் நெல்சன் மரியசவுரி உடனிருந்தனர் .