மேலும் செய்திகள்
இன்று இனிதாக (20.10.2024) திருவள்ளூர்
20-Oct-2024
செஞ்சி: செஞ்சி அடுத்த பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் துவங்கியது.அதனையொட்டி, அன்று காலை 6:00 மணிக்கு மகா அபிஷேகமும், 9:00 மணிக்கு சிறப்பு ஹோமமும் நடந்தது. தொடர்ந்து கலச ஸ்தாபனமும், காப்பு கட்டுதலும் நடந்தது. 7ம் தேதி காலை 6:00 மணிக்கு அபிஷேகமும், கொடியேற்றமும், 8:30 மணிக்கு சக்திவேல் எடுத்தல், 10:30 மணிக்கு காவடி எடுத்தல், பிற்பகல் 3:00 மணிக்கு தபசு மரம் ஏறுதல் மாலை 6:00 மணிக்கு சுப்ரமணியர் சுவாமி வீதியுலாவும், 6:30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சியும், 19ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை செங்குந்த மரபினர் செய்து வருகின்றனர். செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை சிறப்பு அபிஷேக, அலங்காரமும், திருமுருகன் தோற்றம் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று தந்தைக்கு உபதேசமும், இன்று 4ம் தேதி தாருகன் வதமும், 5ம் தேதி சிங்கமுகன் வதம் மற்றும் வீரபாகு துாதும், 6ம் தேதி வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 7ம் தேதி மாலை 6:00 மணிக்கு சுரசம்ஹார நிகழ்ச்சியும், 8ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை செஞ்சி நகர செங்குந்த மரபினர் செய்து வருகின்றனர்.
20-Oct-2024