உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 75 ஆண்டுகளாக தொடரும் சமுதாய பணி

75 ஆண்டுகளாக தொடரும் சமுதாய பணி

விழுப்புரம்; தினமலர் நாளிதழ் சமுதாய சீர்திருத்தம், உள்ளூர் அரசியல், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம், விளையாட்டு, சினிமா ஆகியவற்றில் அதிக பங்காற்றி வருவதாக, தி.மு.க முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் இறையாண்மை ஆகிய வற்றை பாதுகாக்கின்ற பணியில் 'தினமலர்' நாளிதழின் பங்கு முக்கியமானது. மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பது, உள்ளூர் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது என 'தினமலர்' சேவை குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டின் சமூக அரசியல் களத்திற்கு 'தினமலர்' நாளிதழின் பங்களிப்பு மிகவும் அவசியம். அதை 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இன்று பவள விழா (75வது ஆண்டு) கொண்டாடும் 'தினமலர்' நாளிதழின் நிர்வாகிகள், செய்தி ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி