உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

பகலில் எரியும் தெருவிளக்கு

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, லட்சுமி நகரில் பகல் நேரத்தில் வீணாக தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.- சுமன், விழுப்புரம்

வேகத்தடை இல்லாததால் விபத்து

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு - காகுப்பம் சாலை வளைவில் வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் அதிவேகமாக வந்து திரும்பும் போது விபத்து ஏற்படுகிறது.- சொக்கலிங்கம், விழுப்புரம்.

ஆட்டோக்களால் இடையூறு

கள்ளக்குறிச்சி பஸ் நிலைய நுழைவு வாயில், வெளியேறும் பகுதி உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் ஆட்டோக்கள் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.-மோஹிந்த், கள்ளக்குறிச்சி

தற்காலிக கடைகள் ஆக்கிரமிப்பு

கள்ளக்குறிச்சி நகரில் சாலையோரங்களில் தள்ளு வண்டிக்காரர்கள், தற்காலிக கடைக்காரர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. -மிதுன்சிவா, கள்ளக்குறிச்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை