உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெட்டப்பட்ட சாலையோர மரங்கள் கலெக்டர், கமிஷனரிடம் புகார்

வெட்டப்பட்ட சாலையோர மரங்கள் கலெக்டர், கமிஷனரிடம் புகார்

விழுப்புரம் :விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் திடீரென சாலையோர மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் பூந்தோட்டம், ரங்கநாதன் வீதியில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனை, திரையரங்குகள் உள்ளன. நகரில் பிரதான சாலைகளுக்கு மாற்று சாலையாகவும் உள்ளது. தற்போது வெயில் காலத்தில் இந்த மரங்கள் நிழல் கொடுத்து பயனுள்ளதாக இருந்தது.இந்நிலையில், திடீரென மரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வெட்டியுள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் சமூக நல அமைப்பினர், மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து, விழுப்புரம் கரிகாலசோழன் பசுமை மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அகிலன் கூறுகையில், 'விழுப்புரம் நகரில் கடந்த 2018ம் ஆண்டு முதல், வீதிகள் தோறும் பல இடங்களில் மரங்களை நட்டு பாதுகாத்து வந்துள்ளோம்.இப்போது, அந்த மரங்கள் நிழல் தந்து, இந்த கோடை காலத்தில் பொது மக்கள், விலங்குகள், பறவைகளுக்கும் பெரும் பயனளித்து வருகிறது. பூந்தோட்டம் ரங்கநாதன் வீதியில் இருந்த மரங்களை சிலர், அனுமதியின்றி வெட்டி அகற்றியுள்ளனர். கோடை காலத்தில் நிழல் தரும் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை