பணி நிறைவு பாராட்டு விழா
விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் தர்மபுரி வட்டார தடய அறிவியல் துறை துணை இயக்குநருக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.விழுப்புரம் மற்றும் தர்மபுரி வட்டார தடய அறிவியல் துறை துணை இயக்குநர் சண்முகம் பணி ஓய்வு பெற்றார். விழுப்புரத்தில் நடந்த பணி நிறைவு பாராட்டு விழாவில், எஸ்.பி.,க்கள் சரவணன், ஜெயக்குமார் வாழ்த்தி பேசினர். தடய அறிவியல் துறை துணை இயக்குநர் சண்முகம் ஏற்புரையாற்றினார்.விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, அரசு வழக்கறிஞர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அடுத்த கஞ்சனுார் அரசு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ராஜேஸ்வரி பணி ஓய்வு பெற்றார். பள்ளியில் நடந்த பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு, தலைமை ஆசிரியர் ராஜாராமன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனுவாசன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை கணேஷ் வரவேற்றார்.விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி புகழேந்தி பாராட்டி பேசினார். விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி, சி.இ.ஓ., அறிவழகன், டி.இ.ஓ., சேகர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியை பிலோமினா நன்றி கூறினார்.