உள்ளூர் செய்திகள்

கண்டெக்டர் தற்கொலை

விழுப்புரம் : விழுப்புரத்தில் திருமணத்திற்கு பெண் பார்ப்பது பிடிக்காததால், தனியார் பஸ் கண்டக்டர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கனையார் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் முருகன்,29; இவர், தனியார் பஸ் கண்டக்டர். விழுப்புரம் காகுப்பம் பாதையில் உள்ள உறவினர் ரமேஷ் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.இந்த நிலையில், முருகனுக்கு, பெற்றோர் திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்தனர். இது முருகனுக்கு பிடிக்கவில்லை. இதனால், முருகன், நேற்று முன்தினம் வீட்டில் பூச்சி மருந்தை குடித்தார். அவரது குடும்பத்தினர் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முருகன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ