மாநாடு மேடை விஜய் பார்வை
மாநாட்டு பணிகளை, கட்சி தலைவரான விஜய், நேற்று இரவு 10:00 மணியளவில் நேரில் பார்வையிட்டார். அப்போது, மேடை அலங்காரம், பார்வையாளர்கள் அமர போடப்பட்டுள்ள நாற்காலிகள், எல்.இ.டி., திரைகள் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், சில ஆலோசனைகளை மாநிலச் செயலாளர் புஸ்சி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமனிடம் கூறினார்.
தொடர்ந்து, மாநாட்டு மேடையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அறையில், மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., தீபக் சிவாச்சுடன் ஆலோசனை நடத்தினார். மாநாட்டிற்கு வரும் நடிகர்கள் தங்க வசதியாக 6 கேரவன்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது.