ஆரணி தொகுதி பொறுப்பாளர் மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து
திண்டிவனம்: முன்னாள் அமைச்சர் மஸ்தானுக்கு, ஆரணி தொகுதி பொறுப்பாளர் ஊரல் அண்ணாதுரை வாழ்த்து தெரிவித்தார்.விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் மஸ்தான் பிறந்த நாள் விழா நேற்று செஞ்சியிலுள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆரணி சட்டசபை தொகுதி பொறுப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ஊரல் அண்ணாதுரை தலைமையில், மாவட்ட செயலாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், விஜயபாஸ்கர், ஊராட்சி தலைவர் மணி, கிளை செயலாளர்கள் அப்புராஜ், கன்னியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.