உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கைப்பந்தில் சாதனை மாணவிக்கு பாராட்டு

கைப்பந்தில் சாதனை மாணவிக்கு பாராட்டு

விழுப்புரம் : கைப்பந்து போட்டியில் சாதனைகளை படைக்கும் மாணவியை கலெக்டர் பாராட்டினார். விழுப்புரம் ஜெயந்திரர் சரஸ்வதி பள்ளியில் மாணவி குணவதி, பிளஸ் 2 வகுப்பு பயின்று வருகிறார். கொட்டியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த இவரது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். மாணவிக்கு தனது 5ம் வகுப்பு முதல் விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தமிழ்மணி சிறந்த பயிற்சி அளித்து உற்சாகப்படுத்தியதை தொடர்ந்து வட்ட அளவிலும் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பங்கேற்று வெற்றி பெற்றார். இம்மாணவி கைப்பந்து போட்டியில் 10ம் வகுப்பில் மாநில அளவில் பங்கேற்றார். பிளஸ் 1 வகுப்பில், மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றார். தேசிய அளவிலும் போட்டியில் பங்கேற்று விளையாடி உள்ளார். மாணவி குணவதியை பாராட்டி பள்ளி தாளாளர் பிரகாஷ் மற்றும் பள்ளி செயலாளர் ஜனார்த்தனன் பரிசளித்தனர். மேலும் அவரது திறமையை பாராட்டி விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் சான்றிதழ் வழங்கி கவுரவித் தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை