மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
17-Apr-2025
செஞ்சி: செஞ்சியில் மத்திய அரசை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.செஞ்சி கூட்ரோட்டில் காங்., சார்பில் மத்திய அரசின் மும்மொழி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தியும், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ் வழங்கியதை கண்டித்தும், வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.வழக்கறிஞர் லுார்துசாவியோ தலைமை தாங்கினார். நகர தலைவர் சூர்யமூர்த்தி வரவேற்றார். அந்தோணியம்மாள், வழக்கிறஞர் கதிவரன், முகமது இலியாஸ், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில துணை தலைவர் ரங்கபூபதி கண்டன உரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் கார்த்திக், கலைச்செல்வன், திருமால், முனுசாமி, சேகர், பரசுராமன், தமிழ்செல்வி, கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
17-Apr-2025